இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பைங்கிளி 13

 பைங்கிளி 13 பாவமாக முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்தவளை முறைத்துவிட்டு வெளியே சென்றிருந்தான் வசி.  "என்னாச்சு டி உனக்கு? உன் கவனம் எங்க இருக்கு? எப்படி பளுத்து போயிருக்கு பாரு.. கடவுளே!" புலம்பி தள்ளினாள் யாழினி. "என் கவனமும், சிந்தனையும் உன் அண்ணன் ஒருவனிடம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லாமல் வசி சென்ற வழியை பார்த்த படி அமர்ந்திருந்தாள் ஆர்யா. அவள் கரங்களுக்கு மருந்து போட்டுவிட்டு சாப்பாடு ஊட்டிவிட்டு அவளுடன் இருந்தாள் யாழினி. வசி ஸ்ரீனிவாசனிடம் பேசி கொண்டிருந்தான். ஆர்யா உறங்கிய பிறகு வந்த தங்கையை அழைத்து கொண்டு வசி சென்று விட்டான். அதன் பின் ஆர்யாவை பார்க்க வரவே இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் மருத்துவமனை சென்று ட்ரெசிங் செய்து கொண்டாள். ஸ்ரீனிவாசன் அலுவலகம் செல்லாமல் மகளை அருகில் இருந்து பார்த்து கொண்டார். கல்லூரிக்கும் செல்லாமல், வசிகரனை பார்க்கவும் முடியாமல் தவித்து போனாள் ஆர்யா. அவளை கவனித்து கொண்டு தான் இருந்தார் ஸ்ரீனிவாசன். அன்று தோட்டத்தில் இலக்கில்லாமல் பார்வையை செலுத்தி அமர்ந்திருந்த ஆர்யா அருகில் வந்து அமர்ந்தார் ஸ்ரீனிவாசன். ஒரு உருவம் தன் அருகில் அம...

பைங்கிளி 12

 பைங்கிளி 12 பறந்து விரிந்த நீல நிற கடல், பூமி காதலனை அலைகள் மூலம் தொட்டு தழுவி கொண்டிருந்தது. அந்தி சாயும் மாலை நேரம். அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரை ஓரம். மெரினா போன்ற பிசியான சுற்றுலா தளம் இல்லை. மீனவர்கள் வாழும் பகுதி. அவரவர் தங்கள் வேலைகளை பிஸியாக இருக்க, கரங்கள் பிணைந்து விரல் கோர்த்து, அலைகள் தொட்டு தழுவும் கடற்கரை மண்ணில் நடந்து கொண்டிருந்தனர் மிதுனும் யாழினியும். என்ன தான் கட்டுப்பாடுடன் படிப்பிலும் வேலையிலும் கவனம் செலுத்தினாலும் அவ்வ போது இருவரும் இப்படி சந்தித்து நேரத்தை செலவிடுவார்கள். திருமணம் முடிந்ததே என்று தடையின்றி கொஞ்சி குழாவி கொள்ள மாட்டார்கள். அணைப்பு கூட இல்லை. விரல் கோர்த்து நடப்பார்கள், இனிக்க இனிக்க காதல் கதை பேசுவார்கள் அதை தாண்டி எதுவும் நடந்தில்லை இருவரும். இன்றும் அப்படி நேரம் செலவிட, சற்று தூரத்தில் அவர்களை பார்த்த படி அமர்ந்திருந்தாள் யாழினி. அவளை பார்த்த படி, அவள் அருகிலே அமர்ந்திருந்தான் வசிகர். கோலி குண்டு கண்கள் உருட்டி கடலை பார்த்து மகிழும் பூவையை தன் விழிகளில் நிரப்பி கொண்டான். மதியம் வசிக்கு போன் செய்த யாழினி "அண்ணா.. இன்னைக்கு மிதுன பா...