பைங்கிளி 13
பைங்கிளி 13
பாவமாக முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்தவளை முறைத்துவிட்டு வெளியே சென்றிருந்தான் வசி.
"என்னாச்சு டி உனக்கு? உன் கவனம் எங்க இருக்கு? எப்படி பளுத்து போயிருக்கு பாரு.. கடவுளே!" புலம்பி தள்ளினாள் யாழினி.
"என் கவனமும், சிந்தனையும் உன் அண்ணன் ஒருவனிடம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லாமல் வசி சென்ற வழியை பார்த்த படி அமர்ந்திருந்தாள் ஆர்யா.
அவள் கரங்களுக்கு மருந்து போட்டுவிட்டு சாப்பாடு ஊட்டிவிட்டு அவளுடன் இருந்தாள் யாழினி. வசி ஸ்ரீனிவாசனிடம் பேசி கொண்டிருந்தான். ஆர்யா உறங்கிய பிறகு வந்த தங்கையை அழைத்து கொண்டு வசி சென்று விட்டான். அதன் பின் ஆர்யாவை பார்க்க வரவே இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் மருத்துவமனை சென்று ட்ரெசிங் செய்து கொண்டாள். ஸ்ரீனிவாசன் அலுவலகம் செல்லாமல் மகளை அருகில் இருந்து பார்த்து கொண்டார். கல்லூரிக்கும் செல்லாமல், வசிகரனை பார்க்கவும் முடியாமல் தவித்து போனாள் ஆர்யா. அவளை கவனித்து கொண்டு தான் இருந்தார் ஸ்ரீனிவாசன்.
அன்று தோட்டத்தில் இலக்கில்லாமல் பார்வையை செலுத்தி அமர்ந்திருந்த ஆர்யா அருகில் வந்து அமர்ந்தார் ஸ்ரீனிவாசன். ஒரு உருவம் தன் அருகில் அமர்ந்திருப்பது கூட தெரியாமல் நினைவை வசியிடம் துரத்திவிட்டு ஜடம் போல அமர்ந்திருந்தவளை கண்டு "ஆர்யா.." என்றழைக்க, மிக அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு எழுந்தாள்.
அப்போது தான் தந்தையை கண்டு கொண்டவளாய் "அ.. அ.. அப்பா.." பேச்சில் தடுமாறிய மகளை ஆழ்ந்து பார்த்தவர் "என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?" விழியால் அவள் மனதை அறிந்து கொள்ளும் பொருட்டு பார்வையை கூராக்கி கேட்க, "ஒ.. ஒன்னும் இல்ல ப்பா.." இன்னும் தடுமாற்றம்.
எழுந்து நின்று அவளை பார்த்த ஸ்ரீனிவாசன் "சொல்ல விருப்பம் இல்லைனா விட்டுடு டா.. ஆனா ஒன்னும் இல்லைன்னு பொய் சொல்லாத.." விளையாட்டுக்கு கூட பொய் சொல்வது அவருக்கு பிடிக்காது. அங்கிருந்து சென்று ஸ்ரீனிவாசன் சமைத்து முடித்து சோஃபாவில் அமர்ந்து லாப்டாப்பில் தலையை நுழைத்து கொள்ள, அவர் மடியில் படுத்தாள் ஆர்யா.
அவள் கேசம் கோதிய தந்தையிடம் "வசி என்ன லவ் பன்றேன்னு சொல்றாரு ப்பா.." குழப்பமாக கூறினாள். அதிர்ந்தார் ஸ்ரீனிவாசன். தன் அதிர்ச்சியை காட்டிகொள்ளாமல்
"சரி.. நீ என்ன சொன்ன? லவ் ப்ரோபோசல் எல்லாம் உனக்கு புதுசு இல்லையே டா.." மகளின் மனதை அறிந்து கொள்ள கேட்டார்.
அவள் பள்ளி படிக்கும் போது வந்த காதல் கடிதங்களை தந்தையும் மகளுமாக சேர்த்து படித்து வயிறு வலிக்க சிரித்தனர். கடுப்பான அவள் பாட்டி "இந்த அநியாயம் எந்த ஊர்ல நடக்குது. பள்ளிக்கூடம் போற புள்ளைக்கு லட்டர் கொடுத்திருக்கான். போய்அவன் கையால கால உடைக்காம அவ கூட சேர்ந்து நீங்களும் சிரிக்கிறீங்களே.." மகனாகி போன மருமகனிடம் உரிமையாய் கடிந்து கொண்டார் ஆர்யாவின் பாட்டி.
"ஏன் அத்த என் பொண்ணுக்கு இப்டி ஒருத்தன் லட்டர் கொடுத்திருக்கான்னு ஊருக்கே தெரியனுமா..?" என்று கேட்க, தந்தை மகள் இருவரையும் பார்த்தார் அவர்.
"இந்த வயசுல இதெல்லாம் ரொம்ப சகஜம். உங்க ஜென்ரேஷன், என் ஜென்ரேஷன் மாதிரி இப்போ இல்ல. இத என் பொண்ணு தானாவே ஹாண்டில் பண்ணிக்கிவா.." மகளை பார்த்த கூற புன்னகையுடன் எழுந்து சென்றாள் ஆர்யா.
தனக்கு காதல் கடித்தம் கொடுத்தவன் மும் சென்று நின்றவள், "ஹாய் கோகுல்.. இந்தா.." அவன் எழுதிய கடிதத்தை திருப்பி கொடுத்தவள் "காதல்ன்னா என்னன்னு தெரியாத வயசுல இருந்து நான் உன்ன நல்ல நண்பனா தான் பாக்குறேன். இனியும் அப்படி தான். என்னால உன்ன அத தாண்டி வேற மாதிரி பாக்க முடியாது கோகுல். விவரம் தெரியாத வயசுல உன் கைய புடிச்சிட்டு விளையாடியிருக்கேன். அதுல நட்பும் நம்பிக்கையும் தான் இருந்திச்சு. இப்பவும் இருக்கு இனிமேலும் இருக்கும். அத காதல்ன்னு என்னால நினைக்க முடியல. என்னையும் மாத்திக்க முடியாம உன் காதல ஏத்துக்கவும் முடியாம அவஸ்தை பட நான் விரும்பல. நீ என் நண்பன். உன்கிட்ட என மனசுல உள்ளத சொல்றதுல எனக்கு எதுவும் தப்பா தெரியல.." என்று முடிக்க, குறுகி போய் நின்றான் கோகுல்.
ஆர்யா அவனிடம் இயல்பாக பேசுவதால் அவனுடன் சுற்றி வரும் நண்பர்கள் அது காதல் என்று ஏத்தி விட்டு அவனை கடிதம் எழுத வைத்தது. இப்போது ஆர்யா அவள் மனதில் தூய்மையான நட்பு மட்டுமே உள்ளது. அது தெரியாமல் அவசர பட்டுவிட்டேனே.. என்று தலை குனிந்து அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
இன்று வரை கோகுல் நல்ல நண்பனாக இருக்கிறான். அந்த நிகழ்வை நினைவு கூர்ந்த ஸ்ரீனிவாசன் அது போல் இதையும் கடந்து செல் மகளே என்று கூற, வசிகரனை கடந்து செல்ல முடியாமல் தவித்து நிற்கிறாளே பூவையவள்.
"வசி நல்ல பையன். ரொம்ப பொறுப்பானவன். அவங்க குடும்பமும் நல்ல குடும்பம் தான். ஆனா.. அவனோட காதல ஏத்துக்குறதுக்கு இது தேவை இல்லை. உன் மனசு சொல்லணும். பிற்பாதி வாழ்க்கை முழுக்க உன்கூட வர போறவன் எப்படி இருக்கணும்? அவன் மேல உனக்கு என்ன உணர்வு இருக்கணும்னு உன் மனசுக்கு என்ன தோணுதோ அத செய். அப்பாக்கு உன்மேல நிறைய நம்பிக்கை இருக்கு.." என்று நம்பிக்கையுடன் பேசினார்.
தந்தையின் அறிவுரை கேட்டும் அவளுக்கு குழப்பம் தீரவில்லை. வாடிய முகத்துடன் கல்லூரி சென்று வந்தாள். உள்ளங்கையில் இருந்த குணமாகி புது தோள் வளர துவங்கியிருந்தது. அன்று யாழினியுடன் அவள் வீட்டுக்கு சென்றிருந்தாள் ஆர்யா.. வீட்டுக்குள் சென்றதும் அவள் தேடியது வசிகரனை தான். அவன் அவளுக்கு தரிசனம் கொடுக்காமல் போக வீட்டை வலைய வந்தாள்.
மிதுனிடமிருந்து அழைப்பு வர யாழினி தோட்டம் பக்கம் சென்றாள். சுற்றி வந்த ஆர்யா வசி அறைக்குள் நுழைந்தாள். அவன் என்று அவளுக்கு தெரியாது. ஏதோ ஒரு அறை என்று சுற்றி சுற்றி வந்தவள் கட்டிலுக்கு எதிரில் ஆளுயரத்தில் நிற்க வைக்கப்படிருந்த வசி போட்டோ பார்த்து அதிர்ந்தாள்.
இது வசி ரூம்மா? என்ற படி சுற்றி பார்த்தாள். அவன் தலையணை, படுக்கை, பெர்ஃப்யூம், ஹேர் ஜெல், உடைகள் என அனைத்தையும் தொட்டு பார்த்தாள். அவனுடைய போன் சார்ஜ் ஏறி கொண்டிருக்க அதை எடுத்தவள் ஆன் செய்து பார்க்க லாக் இல்லாமல் ஓபன் ஆகியது. உடனடியாக அவள் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து அவள் எண்ணை திருடி கொண்டாள்.
தன் எண்ணை அவன் போனில் இருந்து அழித்து விட்டு மீண்டும் போனை அதே இடத்தில் வைத்தாள். ஒன்றும் தெரியாதது போல சுற்றி பார்த்து கொண்டு வந்தவள் சுவரில் மோதி நின்றாள். 'இங்க எவன் டா வால் கட்டி வச்சது' என்று திரும்ப மார்புக்கு நடுவில் கை கட்டிய படி நின்றிருந்தான் வசி.
டிராக்ஸ் மட்டும் அணிந்து, தோளில் துண்டை போட்டிருந்தான். பாத்ரூமில் பிரெஷ் ஆகி வெளியே வந்தவன் அவளை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தான். என்ன தான் செய்கிறாள் என்று பார்த்து கொண்டு நின்றவன் அவள் தன் போன் எண்ணை திருடி கொண்டதை பார்த்து இதழ் விரித்தான். அவள் அவனை இப்போது கண்டு அதிர, "இ.. இங்க என்ன பண்றீங்க?" வார்த்தைகள் தந்தி அடித்தது.
"இது என் ரூம். நீ எங்க என்ன பண்ற?" அழுத்தமாக வந்த வார்த்தைகளில் தடுமாறினாள்.
"அ.. அது.. " வார்த்தைகள் வராமல் அவள் தத்தளிக்க, "ஆர்யா.." யாழினி அழைக்க, நான் போறேன்.. என்று ஓடினாள்.
அவள் சென்ற வழி பார்த்தவன் சிறு புன்னகை உதிர்த்தான். வீடு வந்த பிறகு அவன் போன் எண்ணை பார்த்து அழைக்கலாமா வேண்டாமா? என பல மணி நேர யோசனைக்கு பிறகு 'உங்ககிட்ட பேசணும்..' குறுஞ்செய்தியாக அனுப்பினாள்.
ஒரு டிக்கொடு நின்றது. அழைத்து பேசலாம் என்றால் அதற்கும் மனம் ஒப்புக்கொள்ளாமல் போக தலையணையை கட்டி கொண்டு உறங்கி போனாள். மறுநாள் காலை கல்லூரி வந்தவள் போன் எடுத்து பார்க்க, இரண்டு டிக் இருந்தது. தன் மெசேஜ் அவனை சென்றடைந்து விட்டது என்று மகிழ்ச்சி கொண்டவள் மனம் அடுத்து நொடியே சோர்ந்து போனது அவனிடமிருந்து பதில் வராததை கண்டு.
ஒரு நாள் முழுக்க இரண்டு டிஃக்கோடு இருந்தது. ப்ளூ ஆகவில்லை. அப்படியானால் அவன் இன்னும் பார்க்கவில்லை. தன்னை தவிர்கிறான் என்று நினைத்து கண்ணீர் கரித்து கொண்டு வந்தது. இரண்டு நாட்கள் கழிந்தது.
"ஆர்யா.. நீ ஏன் இப்போல்லாம் ஒரு மாதிரி இருக்க?" யாழினி அவள் முகத்தை ஆராய்ந்தபடி கேட்க, "ஒன்னும் இல்ல. மனசு சரி இல்ல." என்று எழுந்து சென்றாள். தோழி மனம் அவளுக்கு தெரியாதா.. தெரிந்தும் காட்டி கொள்ளாமல் இருந்தாள்.
அன்று இரவு வசிக்கு அழைக்க அவள் அழைப்பை அவன் ஏற்கவில்லை. மீண்டும் அழைக்க இணைப்பு துண்டிக்கப்பட்டது. அழுதே விட்டாள். தன் அறையில் அமர்ந்து ஊமையாக அழுதாள். அடுத்தடுத்த நாட்களிலும் இதே கதை தான். அவள் அழைக்கவும் அவன் துண்டிக்கவும் என்று செல்ல, முழுதாய் பத்து நாள் கடந்து போயிருந்தது.
"ஆர்யா... இன்னைக்கு எங்க வீட்டுக்கு போலாம்.." யாழினி அழைக்க, "வேண்டாம் யாழினி. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் வீட்டுக்கு போறேன்.." என்று சென்றாள்.
வீட்டுக்கு செல்லாமல் கடற்கரையில் நடை பயின்று கொண்டிருந்தாள். அப்போது வசியும், அவனுடன் ஒரு பொண்ணும் கார் அருகில் நின்று பேசி கொண்டிருந்தனர். இருவரும் சிரித்து சிரித்து பேசி கொண்டிருப்பதை கண்டவளுக்கு 'நான் ஏற்கவில்லை என்ற உடன் என் காதலை வேறு ஒருத்திக்கு கொடுத்து விட்டான்.. " என்று நினைத்து அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.
அழுது அழுது தேய்ந்தவள் அறைக்குள்ளே முடங்கினாள். என்ன பண்ணுது ஆர்யா? அன்பு தந்தை கேட்டும் மௌனமாக இருந்தாள். சிறு பிள்ளை அல்ல அவள். அவளாக தேறி வரட்டும் என்று அவரும் அமைதியாக சென்று விட்டார். முழுதாய் ஒரு மாதம் கடந்து போனது. மாட்டேன்.. மாட்டேன்.. என்றவளை விடா பிடியாக இழுத்து சென்றாள் யாழினி அவர்கள் வீட்டிற்க்கு.
அன்று யாழினி வீட்டில் பூஜை என்பதால் தாவணி உடையில் வந்திருந்தாள். என்ன தான் தன் காதலை வேறு ஒருத்திக்கு அவன் கொடுத்திருந்தாலும் மானம் கெட்ட மனது அவனை தான் தேடியது. விழியும் சோர்ந்து போனது அவனை காணாமல். சோர்வாக அமர்ந்திருந்தவளுக்கு கோமத்தில் இருந்து வந்து புகை ஒத்து கொள்ளாமல் போக, யாழினியிடம் கூறிவிட்டு எழுந்து தோட்டம் பக்கம் சென்றாள்.
காரில் வந்திறங்கிய வசி தான் கொண்டு வந்த பொருட்களை வைத்துவிட்டு யாழினியை பார்க்க தோட்டம் பக்கம் கண் காட்டினாள். சிறு புன்னகையுடன் அங்கிருந்து நழுவி சென்றான். பூத்து சிரிக்கும் பட்டன் ரோஜாக்களை பார்த்த படி நின்றவளை சுற்றும் பார்த்த படி ஸ்லீவ் ஏற்றி கொண்டு நெருங்கி வந்தவன் இடையோடு வலைத்து அணைக்க திடுக்கிட்டு அதிர்ந்து விலகினாள்.
அஞ்சனம் பூசிய அவள் அள்ளி விழிகளில் பிம்பமாய் விழுந்தவன் இதழ் விரித்து சிரிக்க, கடவுளை கண்ட பக்தன் போல பரசவம் அடைந்தவள் முகத்தில் ஆயிரம் கோடி சூரியனின் ஒளி தெரிய, மறு நொடியே கோபம் கொண்டவள் அவன் கண்ணத்திலே அறைந்தாள்.
இது அவன் எதிர் பார்க்காதது. மை பூசிய விழிகலில் வழிந்த கண்ணீர் அவள் கன்னத்தில் வடிய "கொஞ்சம் கூட பொறுமையே இல்லையா உங்களுக்கு?" கோபம் தொணிக்க கேட்டவள் வார்த்தைகளில் புரியாமல் பார்த்தான்.
"உங்க மனசுல என்மேல வந்த காதலை எப்படி இன்னொருத்திக்கு தூக்கி கொடுக்க மனசு வந்திச்சு உங்களுக்கு..?" என்று அழுதாள். என்ன சொல்றா இவ? என்று அவனும் பார்த்து கொண்டே இருக்க "என்னைக்கு எனக்கு உங்கமேல எந்த பீலிங்ஸ் இல்லன்னு சொன்னேனோ அன்னைல இருந்து என மனசுல மூளைல நீங்க மட்டும் தான் இருக்கிங்க.
இல்லைன்னு நான் நினைச்ச பீலிங் உங்கமேல இருக்கு. அத நான் புரிஞ்சுக்க லேட் ஆகிடுச்சு. அதுக்குள்ள நீங்க உங்க மனச இன்னொருத்திக்கு தூக்கி கொடுத்திட்டிங்கல்ல.." அழுது கொண்டே பேசினாள்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் "இனிமே உங்க வாழ்க்கைல நான் வர மாட்டேன். அடிச்சதுக்கு சாரி.." கண்ணீரை துடைத்து கொண்டு சென்றவளை இடை வலைத்து தூக்கி தன்னோடு அணைத்து அழுத்தமாய் அவள் இதழில் தன் இதழ் பதித்து எச்சில் சுவையில் முதல் அச்சாரம் வைத்தான். அவன் செய்கையில் திடுக்கிட்டு அதிர்ந்தாள் ஆர்யா....
கருத்துகள்
கருத்துரையிடுக